
யாழ். குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் நாள் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலையான சம்பவத்து டனான 05 காவல்துறையினருக்கும் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியு ள்ளது. காலை யாழ். மேல் நீதிமன்ற த்தில் குறித்த வழக்கு நடைபெற்ற போதே இப்பிணை அனுமதி வழங்க ப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோ பர் மாதம் 20ஆம் நாள் நடைபெற்ற இச்சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழ கத்தின் ஊடக மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் மற்றும் அரசறிவியல் மாணவனான நடராஜா கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிரு ந்த நிலையில், சம்பவ இடத்திலிரு ந்து வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்ப ட்டதுடன், துப்பாக்கிச் சூட்டிலேயே மாணவர்கள் உயிரிழந்தமையும் நிரூ பணமாகியது. இதற்கமைய, இச்ச ட்டு ச் சம்பவத்துடன் தொடர்புடையவ ர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ். காவல்நிலையத்தைச் சேர்ந்த 5 காவ ல்துறையினர் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த னர்.
வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ஐந்து காவல்துறையினராலும் பிணை அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்களுக்கு பிணை அனுமதி யினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒவ்வொருத்தருக்கும் தலா 2 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணையும், 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
ஐந்துபேரும் ஒவ்வொரு மாதமும் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டுமென கட்டளையிடப்பட்டதுடன், ஐவரின் கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றில் வழங்குமாறும் பணிக்கப்ப ட்டுள்ளது.