
யாழ்ப்பாணத்தில் 512ஆவது இராணு வமுகாம் அமைந்துள்ள சிங்களப் பாடசாலையை சிங்களப் பாடசாலை யாகே ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானி யல் டிக்சன், அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் கோரிக்கை கோரியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு ஆன்மீகச் சுற்று லாப் பயணமாக வருகை தந்த கண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்கு ரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே வணபிதா டானியல் டிக்சன் சிங்களப் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டுமாறு கோரிக்கை.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, பலாலி ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றை அவை அமைந்திருந்த இடங்களிலேயே இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரியிருந்தார்.
மும்மொழிகளையும் கற்பிக்கவேண்டிய தேவையெழுந்துள்ளதாகவும், சிங்கள மொழியினை கற்பிப்பதற்கு சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும்இயக்குவதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேரர், குறித்த சிங்கள மகா வித்தி யாலயத்தை இயக்குவது தொடர்பாக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வின் ஆலோசனைப்படி அதனை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.