இன்று சனிக்கிழமை (09-09-2017) கண்டி நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்து வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மல்வத்த பீட மஹாநாயக்க தேரரை சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசியுள்ளதுடன் ஆசியையும் பெற்றுள்ளார்.
குறித்த சந்திப்புக் குறித்து முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்:
வடக்கு மாகாணம் தொடர்பில் தெற்கு மக்களுக்கு தவறான எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் மஹாநாயக்கரைச் சந்தித்து விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் மேலும் சந்திப்புக் குறித்து தெரிவித்துள்ளார்.