அந்த வகையில் ஜெனீவா மனித உரிமை பேரவை வளாகத்தில் இடம்பெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு உரையாற்றிய செபமாலை அடிகளார், தனது அலுவலகம் சோதனையிடப்பட்ட தகவலை அம்பலப்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெனீவாவில் அழுத்தம் பிரயோகத்துவரும் நிலையில் தனது அலுவலகத்தை புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளமையானது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவே ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலைமை என்று சுட்டிக்காட்டிய அருட்தந்தை செபமாலை அடிகளார், சுதந்திரம் உள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இன்னும் அது நடைமுறையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
செபமாலை அடிகளாரின் அலுவலகத்தைச் சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர்!
Related Post:
Add Comments