ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு!

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இயல்பு நிலைக்குக் குந்தகம் விளைவிக்காது, பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்த முடியும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இயல்பு நிலைக்குக் குந்தகம் விளைவிக்காது, பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்த முடியும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
           
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு விவகாரத்துக்கு தீர்வு வழங்காது ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வருவாரானால் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொலிஸார் கோரியிருந்த நிலையில் நீதிவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளை வழங்கியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila