இன்று இந்திய அரச பயங்கரவாதிகள் யாழ் போதனா வைத்தியசாலையினுள் புகுந்து நடத்திய வெறியாட்டத்தின் 30 வது ஆண்டு நினைவு நாள். 2009 மே இற்குப் பிறகு எமக்கான ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாத நிலையில் இந்த படுகொலைகளை உணர்வுபூர்வமாக மட்டுமல்ல – மிகவும் உக்கிரமாகவும் நினைவு கொள்வதனூடாகவே பிராந்திய மற்றும் புவிசார் அரசியலை தமிழர் தரப்பு தம் வசம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆனால் எமக்கான அரசியலை செய்வதாகக் கூறிக் கொள்ளுபவர்கள் யாரும் இதைக் கணக்கில் எடுப்பதில்லை என்பது மட்டுமல்ல எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அதை ஏதோ வழியில் நீர்த்துப் போகவும் செய்கிறார்கள். இதை பேசிப் பேசி நாம் களைத்து விட்டோம். ஆனால் உதிரிகளாக வேறு சிலரும் இதில் ஈடுபடுவது கவலைக்குரியது.
ஒரு பக்கம் மக்கள் தன்னெழுச்சியாக இந்த நாளை நினைவுகூர வேறு ஒரு தரப்பு பிரம்மாண்டமான அளவில் இன்று ‘ 1000 கவிஞர்கள் – கவிதைகள்’ என்ற நூலை அதுவும் இந்தியத் துணைத் தூதுவரை கூப்பிட்டு வெளியிடுவதாக அறியக் கிடைக்கிறது. மிகவும் வேதனைக்குரிய விடயம் இது.
இது ஒரு வகையான இன அழிப்புக்கு வெள்ளையடிக்கும் வேலை.
களம், புலம், தமிழகம் என்ற அளவில் 1000 கவிஞர்கள் என்றளவில் ஒன்றுபடுவது பெரிய விடயம் – ஒரு தோழமையையும் உருவாக்கும்.
அது மடடுமல்ல மே 18 இற்கு பிறகு ‘தமிழ்’ என்ற அடையாளத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றிணைதல் – ஒன்றுகூடுதல் என்பது அரசியல் ரீதியாக பெறுமானம் மிக்கது என்கிறது ‘நந்திக்கடல்’. அந்த அடிப்படையில் இந்த நூல் முயற்சி பாராட்டுக்குரியது.
அது மடடுமல்ல மே 18 இற்கு பிறகு ‘தமிழ்’ என்ற அடையாளத்துடன் ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றிணைதல் – ஒன்றுகூடுதல் என்பது அரசியல் ரீதியாக பெறுமானம் மிக்கது என்கிறது ‘நந்திக்கடல்’. அந்த அடிப்படையில் இந்த நூல் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் ஒரு இன அழிப்பு நினைவு நாளில் அந்த இன அழிப்புக்கு காரணமாவர்களை கூப்பிட்டு வெளியிடுவதனூடாக அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள். இது அரசியல் அறிவீனமா? பொறுப்பின்மையா? திட்டமிட்ட சதியா சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்.