சுவிஸில் சுட்டுகொல்லப்பட்ட கரனின் குடும்பம் சுவிஸ் நோக்கி பயணம் !


சுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சே ர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறு திக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்து நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுக் கொ ல்லப்பட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் சுவிஸ் பயணமான குறித்த குடும்ப அங்கத்தவர்கள்  பயண மாகும் தாம் நாளை சுவிஸ் சென்றதும் அங்கே உடனடியாகவே இறுதிக்கிரி யைகள் நடைபெற இருப்பதாகவும் தமக்கு சொற்ப நேரமே கிடைக்கும் எனவும் கவலை வெளியிட்டுள்ளனர். 

அத்தோடு தமக்கு சுவிஸ் மண்ணில் யாரும் உறவினர்கள் நண்பர்கள் எவரும் இல்லை எனவும் தமக்காக அனைத்து சுவிஸ் வாழ் இலங்கை உறவுகளும் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமெனவும் தமக்கான உதவிகளை யும் வழங்கவேண்டும் எனவும் இந்த கொலைக்கான நீதியும் தமக்கு கிடைக்க உதவி புரியவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila