அரசியலமைப்பு உருவாக்க த்திற்கான செயற் குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கை யில் “ஏகீய” எனும் சிங்களப் பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் மொழி பெயர்ப்பான “ஒருமித்த நாடு” என்ற சொல் பிரச்சினைக்குரியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.
நேற்று அவசரமாக கூடிய இச் சங்கம் அரசியலமைப்பு தொடர்பாக முன்வைத்துள்ள இடைக்கால அறி க்கை தொடர்பில் ஆராய்ந்ததாக வும் இதன்பின்னர் இந்ததீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒருமித்த நாடு எனும் சொல், பல பிராந்தி யங்கள் இணைந்து உருவாகும் ஒரு நாடு என்ற கருத்தைக் கொடுப்பதாகவும் இது தற் பொழுதுள்ள “ஏகீய” எனும் சிங்களச் சொல் குறிப்பிடும் கருத்துக்கு முற்றிலும் வேறுபட் டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கையிலுள்ள இப்பதம் சிக்க லுக்குரியது என்ற கருத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் மாற் றம் செய்வது முக்கியமானது என்பதையும் இச்சங்கம் கூறிக் கொள்கின்றது எனவும் சட் டத்தரணி சில்வா மேலும் அறிவித்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் சட்டத் தரணிகள் சங்க தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.