அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் பேச்சைத் தொடுக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

பாதுகாப்பு அமைச்சு, நீதியமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்கள் மீதான விவாதம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றபோது, பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எந்தவொரு உறுப்பினரும் உரையாற்றவில்லை. 

காலை 10 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை இம்மூன்று அமைச்சுக்க ளுக்கான விவாத நேரம் ஒதுக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் காலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினரான துரைரெட்ண சிங்கம், எதிர்க்கட்சி சார்பில் விவா தத்தை ஆரம்பிப்பதற்கான சம்பிர தாய பூர்வ உரையினை மாத்திரம் வெளியிட, அமைச்சரான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விவாதத்தினை ஆரம்பித்துள்ளார்.

காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடியபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் துரைரட்ணசிங்கம், ஸ்ரீதரன் ஆகியோர் சபையில் கலந்துள்ளதுடன் பின்னர் ஸ்ரீதரன் சபையிலிருந்து வெளியேறியுள்ளார். 

இதுமாத்திரமன்றி விவாதம் ஆரம்பித்த பின்னர் சபைக்குள் 10.40 மணியளவில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், அடுத்த நிமிடமே வெளியே றிச்சென்றார். 

பின்னர் 11.40 மணியளவில் மீண்டும் சபைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வருகை தந்தார். 12.30 மணிக்கு மதிய உணவு இடைவேளைக்காக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் 1 மணிக்கு கூடியபோது, இருவ ரும் சபையில் காணப்பட்டனர். 

பின்னர் வெளியேறி விட்டனர். இறுதியில் மூன்று முக்கிய அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் எவருமே உரையா ற்றவில்லை. 

இவ்விவாதத்தில் உரையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு 50 நிமி டங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவரின் பெயர் சபாபீடத்தில் இரு ந்தவரால் நீண்ட நேரமாக அழைக்கப்படாததால் அவர் உரையாற்றாது வெளி யேறிச்சென்றதாக பின்னர் தகவல் கசிந்துள்ளது.  

இதேவேளை வழக்கமாக பாதுகாப்பு, நீதி, சட்டம், ஒழுங்குகள், மீதான விவா தத்தில் இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்ற முக்கிய ஸ்தர்கள் பேசுவது வழமையாக இருந்தபோதும், இம்முறை அந்த வழக்கத்தை யும் அவர்கள் கைவிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila