கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே சமகால அரசியல் நிலை தொடர்பாக மன்னார் ஆயர் இல்லத்தில் கலந்துரையாடல்


மன்னார் மறை மாவட்ட கத் தோலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையின் ஏற்பாட்டில் வட, கிழக்கு சமகால அரசியல் தொடர்பான விசேட கூட்டம் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று பிற் பகல் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட இலங்கைசெஞ்சிலுவைச் சங்க தலைவரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றிய அமை ப்பாளருமான கெனடி இந்தக் கூட்டத்துக்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டிருந்தார்.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், டெலோவின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பின ர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த அருட் தந்தை யர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த னர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கா ளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதி களை நேற்று நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இல ங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன் னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.
எனினும், பின்னர் கூட்டமைப்பில் இணை த்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்ட மைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டி ற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அண்மை க்காலமாக பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதி கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு இலக்கான அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு முதலமைச்சர் விக் னேஸ்வரன் நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத் தில் தமிழரசுக் கட்சி தமது அதிகாரத்தை நிரூபிக்கும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படா மைக்கு தமிழரசுக் கட்சியும் ஒரு காரணம் என கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் கட ந்த காலங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தன.

தமிழரசுக் கட்சியின் தான்தோன்றித் தன மான செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டி யிடப்போவதில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பகிரங்கமாக அறி வித்துள்ளது.
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதற் கான உரிமை அக்கட்சிக்கு உள்ளதென தமி ழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனா திராசா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளு மன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் அறிவித்தி ருந்தார்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் ஒற் றுமை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழு ந்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பி னர்களும் தற்போது ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது
இதன் பின்னணியில், கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகள் மன்னார் ஆயர் இல் லத்திற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு நடைபெற்ற கலந்துரையாடலுக்கு மன் னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரி பாலகர் பேரருட் திரு.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமை தாங்கினார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila