இது தொடர்பில் மேற்படி மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள செய்தி குறிப்பினில் குறித்த கலந்துரையாடல் மிகவும் இக்கட்டான ஒரு சூழ் நிலையில் மேற்கொள்ளப்படவிருப்பதால் அனைத்து மக்கள் பிரதி நிதிகளினையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3ம் திகதி பிற்பகல் 2.00மணிக்கு தவறாது ஒன்றுகூடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒன்றுகூடலினை உதாசீனம் செய்பவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை உதாசீனம் செய்பவர்களாக கருதப்படுவார்கள் என்றும் மேற்படி மாணவர் ஒன்றியம் தெரிவித்துமுள்ளது.