இலங்கை அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு காணியை விடுவிக்க கோரி போராடுவதனை கூட்டமைப்பு தடுத்துவருவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மயிலிட்டியை எடுத்துக்கொண்டால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 600 ஏக்கரில் 54 ஏக்கரை விடுவத்துவிட்டு மயிலிட்டி முழுவதுமாக விடுவிக்கப்பட்டதாக பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து கதைக்க முடியாமலும் போராட முயாமலும் இருக்கிறது.
ஏனெனில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதால் அவர்களும் இதனை எதிர்த்து குரல் கொடுக்காத அதே நேரம் எங்களையும் போராட்டங்களை முன்னெடுக்க விடாது கூட்டமைப்பினர் தடுக்கின்றனர்.
ஆகவே இனியும் நாம் பார்த்துக் கொண்டிருக்காது இவை எல்லாவற்றுக்கும் எதிராக தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று யாழப்பாணத்தினில் நடைபெற்ற அவ்வமைப்பின் ஊடக சந்திப்பிலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக இருந்தவரும் தற்போதைய இராணுவ தளபதியுமான மகேஸ் சேனநாயக்கவுடனான இரகசிய உடன்படிக்கையினையடுத்து வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தை பொது அமைப்புக்களும் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.