புலனாய்வு துறையின் அதீத கண்காணிப்பின் கீழ் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் வாரம் எழுச்சியுடன் நேற்று ஆரம்ப மாகியுள்ளது. முதல் மாவீரரான லெப்டினன் சங்கரின் நினை வுத் தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. மேலும் யாழ்.பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் நேற்று உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மாவீரர் வாரத்தின் முத லாவது நாள் நேற்றைய தினம் எழுச்சியுடன் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், வல்வெட்டித் துறையில் அமைந்துள்ள முதல் மாவீரர் லெப்.சங்கரின் நினைத்தூபியில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. வடமராட்சி மாவீ ரர் ஏற்பாட்டுக்குழுவால் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் முதல் மாவீரர் லெப்.சங் கர் நினைத்தூபி சிரமதானப் பணி நிறைவு செய்தபின் வெண்நிற வர்ணம் பூசி நினைவுத்தூபி அலங்கரிக்கப்பட்டது.
இதன் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த நினைவு தூபியடியில் கூடிய பொது மக்கள் மற்றும் அயலவர்கள், உறவினர்கள், குறித்த நினைவு தூபியில் தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தார்கள். இதற்கு முன்னதாக மற்றுமொரு மாவீரரான கப்டன் பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி பிரதான நினைவு சுடரை ஏற்றி அஞ்சலிகளை ஆர ம்பித்து வைத்தார்.
இந்த நினைவு நிகழ்வுகளில் யுத்தத்தி ற்கு பின்னர் முதல் முறையாக மாவீரர்க ளான சங்கர், மாலதி, பண்டிதர் மற்றும் பல மாவீரர்களின் உருவப்படங்கள் வைக்கப்ப ட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. இதனால் குறித்த பகுதிகளில் புலனாய்வு பிரிவினரின் கடுமையான கண்காணிப்பும் பொலிஸ் ரோந்தும் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டிருந் தது. குறித்த தூபியில் மாவீரர் வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் அறி வித்துள்ளனர்.
மேலும் இந்த நிகழ்வுகள் அரசியல் கல ப்பற்றவை எனவும், நாங்கள் எமது பிள்ளை களையும் அவர்களது தியாகங்களையுமே நினைவு கூருகின்றோம். ஆகவே அரசாங் கம் மற்றும் இராணுவம் இதற்கு எந்த இடை யூறும் வழங்காமல் எமது மாவீரர்களை நினைவுகூரும் போது இடையூறுகள் வழ ங்க கூடாது என கப்டன் பண்டிதரின் தாயார் கோரியுள்ளார். இந்த நிகழ்வுகளின் போது தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையும் உட னிருந்தது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் வார ஆரம்ப நிகழ்வுகள் நேற்று உணர்வு பூர்வ மாக ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிகள் எங்கும் கொடிகள் பறக்கவிடப்பட்ட துடன், தேசத்தின் விடிவுக்காய் உயிர் நீத்த வர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை புனரமைக்கும் பணியையும் மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
பல வருடங்களாக புனரமைப்பு நிறைவ டையாமல் இருந்த குறித்த தூபியை நேற்றைய தினம் மாணவர்கள் புனரமைத்து அலங்கா ரம் செய்ததுடன், மின்குமிழ்களையும் ஒளிர விட்டிருந்தனர்.
இந்த மாவீரர் வாரத்தில் தொடர்ந்து மாவீரர் நினைவாக சில செயற்பாடுகளை யும் மேற்கொள்ளவுள்ளதாகவும் மாணவ ர்கள் தெரிவித்துள்ளனர்.