அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆயுத குழுக்களாக செயற்பட்டவர்கள் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், விடுதலை புலிகளை அழிக்க உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இன்று மாவீரர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது நாம் நன்கு அறிவோம். அதேபோல், இன்று ஈ.பி.டி.பியினர் மாவீரர் தினம் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றார்” என்றார். மேலும், “இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பிரபாகரன் ஏற்றுக்கொள்ளாத அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்துக்கு ஒப்பான ஒற்றையாட்சி தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர். இவர்கள் கிளிநொச்சியில் உள்ள உங்களிடமும் வருவார்கள்” எனவும் தெரிவித்தார். |
அரசுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் மாவீரர் தினம் பற்றி பேசுகின்றனர்! - கஜேந்திரகுமார்
Related Post:
Add Comments