பங்காளிக் கட்சிகளை உதாசீனம் செய்து தனி வழியில் செல்கிறது தமிழரசுக் கட்சி! (சம்பந்தனின் போக்கை சாடுகிறார் சுரேஷ்)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, பங்காளிக்  கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ.பி. ஆர். எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டம் இத ற்கு ஒரு உதாரணம்  எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மருதனார்மடப் பகுதியில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மேதினக் கூட்டம் முழுமையாக தமிழரசுக் கட்சியின் கூட்டமாக இருந்ததே தவிர, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமாக இருக்க வில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறு இருக்கப் போகிறது? அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்? என்பது குறித்து எந்த தகவலும் தமிழ் மக்களுக்கு தெரியாது.

கடந்த தேர்தலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு 2016ஆம் ஆண்டு எட்டப்படும் என அவர் கூறியதை வைத்தே மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். தனியான கட்சிகள் சார்பில் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து விஷயங்களையும் கூட்டமைப்பின் தலைவர் இரகசியமாகவே கையாளுகிறார் எனக் கூறும் சுரேஷ், தமிழரசுக் கட்சி தனி வழியாகச் செயற்பட்டு தனிவழியில் செல்ல விரும்புகிறது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசு கட்சியினரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் எனவும் சாடியுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பிலுள்ள இதர கட்சிகள் அவ்வாறு எவ்வகையிலும் செயல் படவில்லை என்கிறார்.

தமிழ் மக்கள் மத்தியில் சம்பந்தர் பொய்யான ஒரு பிம்பத்தை கொண்டுவர முயற்சிக்கிறார் எனவும் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான, முழுமையான அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சியை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila