"இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசால் ஏன் முடியவில்லை? முஸ்லிம் மக்களுக்கு நல்ல தலைவர்கள் அமைந்துள்ளனர். அது முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த கொடை. இராணுவத்தையும் சிறப்பு அதிரடிப் படையும் வடக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என மாகாண சபை வலியுறுத்தி வருகின்றது. எனுனிம் இளைஞர்களின் வாள்வெட்டுக்கள் உள்ளிட்ட வன்முறைகள் இருக்குமாயின் இராணுவம் எமது மண்ணில் நிலைகொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். "யாழ்ப்பாண இளைஞர்கள் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகளின் பிரியர்கள் என வெளியில் பேசப்படுகின்றது. ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் இந்த வன்முறைகளின் பின்னணியில் பொலிஸார் மெளனமாக உள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். |
முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்துள்ளார்கள்! - பாராட்டுகிறார் அனந்தி!
Add Comments