தலவாக்கலை அதிரடிப்படையினரும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இன்றைய தினம்(18) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 100 கிலோ மாவா போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இந்த சுற்றி வளைப்பு இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேன்போது, போதை பொருட்களுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபர் பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளனர்.