கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சவகச்சேரி -நாவற்குழி பகுதியில் வைத்து நாவற்குழி இராணுவ முகாம் தளபதியான துமிந்த கெப்டிவெலானவால் கைது செய்து சென்ற நபர்கள் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் மூன்று ஆட்கொணர்வு மனுக்காளனது சட்டத்தரணி குருபரன் மற்றும் சுபாஷினி ஆகியோரால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ் மனுவில் நாவற்குழி இராணுவ முகாம் தளபதி துமிந்த கெப்டி வெலாவன முதலாம் எதிரியாகவும், இரண்டாம் எதிரியாக இராணுவத் தளபதியும், மூன்றாம் எதிரியாக சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்படி இம் மனுத் தொடர்பான விசாரணையானது இன்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார். |
காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு - இராணுவத் தளபதியை ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
Add Comments