இன்று நவம்பர் 27. மண் மீட்புக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவேந்தும் திருநாள்.
நாம் வாழ்வதற்காக அவர்கள் தங்கள் உயி ரைத் தியாகம் செய்தனர். பிறர் வாழ தன்னு யிரைக் கொடுப்பவர்களே தியாகி.
அந்தத் தியாகத்தின் உரித்தாளிகளை நினைவேந்தும் இந்நாளில் நாம் அனைவரும் அகவணக்கம் செலுத்தும் கடமைப்பாட்டுக் குரியவர்கள்.
மாவீரர்களுக்குச் செலுத்தும் அக வணக் கம் சுயநலம் கடந்தது. தன் தாயை; தந் தையை; உடன்பிறந்த சோதரர்களை; கட்டிய மனைவியை; பெற்ற பிள்ளையை மறந்து தமிழ் வாழ, தமிழன் வாழ தன்னுயிரை ஆகுதியாக் குதல் என்பது சாதாரணமானவிடயமன்று.
ஆம், உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடந்துள்ளன வாயினும் ஈழ மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டம் என்பது புதுமை நிறைந்தது. அற் புதம் கலந்தது.
கொண்ட இலட்சியத்தை அடைய உயிரை ஆயுதமாக்கிய தியாகம் சொல்லுந்தரமன்று.
என்னை இழந்த பின்பு எனக்காக இந்த உலகில் ஏதும் இல்லை என்று தெரிந்த பின்பும் என் தமிழன் வாழ்வான், என் தாய் வாழ்வாள் என்ற நம்பிக்கையோடு களமாடி விடுதலை வேள்விக்குத் தம்மையே ஆகுதியாக்கிய மாவீ ரர்கள் புனிதமானவர்கள்.
அந்தப் புனிதர்களை நெஞ்சிருத்தி நினை வேந்தும் இன்றைய நாளும் புனிதமானது.
எனினும் எங்கள் மண்ணில் எங்களுக் கான உரிமைகள் இன்னமும் கைக்குக் கிட்டா மல் இருப்பதனால் எங்கள் மாவீரர்களை நினைவேந்தவும் அவர்களுக்காக நினைவுச் சுடர் ஏற்றுவதையும் கட்டுப்படுத்த படைத்தரப்பு உசார்ப்படுத்தப்படுகிறது.
நினைவேந்துவது அடிப்படை மனித உரிமை யாக இருக்கின்ற போதிலும் அதற்கும் நம் மண்ணில் இட்டல் இடைஞ்சல்கள் ஏராளம் என்றால் என்ன செய்வது.
ஓ! மாவீரர்களே நீங்கள் மரணத்தை வென்ற வர்கள். உங்களை நினைவுகூருவது கண்டு மரண பயம் கொள்வோர் பதறவே செய்வர்.
ஆனால் காலம் கனிகின்றபோது உங்கள் நினைவேந்தல் தமிழர்களின் முதன்மை நிகழ்வாக மாறும். அதுவரை சந்தனப்பேழை களில் அமைதியாக உறங்குங்கள்.
இன்றைய நினைவு நாளில் தமிழ் உறவுகள் கலங்குவது கண்டு நீங்கள் துயில் துறப்பீர்கள். இன்னும் எம் இனம் உரிமை பெறவில்லையா? என்று ஏங்குவீர்கள்.
கூடவே தமிழ் மக்களின் ஒட்டுமொத்தத் தியாகத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு சொந்த நலன்களுக்காக எங்கள் உரிமை களையயல்லாம் விட்டுக்கொடுத்து பெற்ற பதவி போதும் என்று எம் இனத்தை ஏமாற்றும் எம்ம வர் கண்டு கலங்குவீர்கள்.
அந்தக் கலக்கம் வேண்டாம். நீங்கள் தியாகிகள். அமைதியாக உறங்குங்கள். ஆனால் ஒன்று, போருக்குப் பின்பு தமிழர்களை ஏமாற் றிய தமிழனை ஒருபோதும் மன்னித்துவிடா தீர்கள்.