தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் யாழ். வடமராட்சியில் நடுக்கடலில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நடுக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை அப்பகுதியில் உள்ள அனைவரின் மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசையினால் இவ்வாறு நடுக்கடலில் ஈகைச்சுடர் ஏற்றப்படுவது வழக்கமாக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று தசாப்த கால யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக யாழ். வடமராட்சி கடற்பரப்பில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.