
மகிந்த ராபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை மந்தகதியில் இருப்பதால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்க ப்பட்டுள்ள நிலையில் அவற்றை விசாரிக்க விசேட நீதிமன்றம் நிறுவப்பட வுள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துகோரள வி னால் முன்வைக்கப்பட்ட ஆலோச னைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில்( செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட த்தில், இவ் ஆலோசனை முன்வைக்க ப்பட்டதோடு, இதற்கு அனைவரும் ஆதரவு வழங்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்திலான பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் மந்த கதியிலேயே செல்கின்றதென தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்ற ஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
இது, முன்னாள் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் செயலென மக்கள் விடுதலை முன்னணி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகின்றது. இவ்வாறான பின்னணி யில், கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்கு களை ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்திற்கு மாற்றி, துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.