முல்லைதீவு மாவட்டத்தினில் மட்டும் சுமார் 15ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை 2012ம் ஆண்டின் பின்னர் வனவளத்திணைக்களம் சுவீகரித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.முல்லைதீவினில் மணலாற்றின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து பாரிய வெலிஓயா சிங்களக்குடியேற்றத்தை உருவாக்கியுள்ள அரசு தற்போது முல்லைதீவினில் தமிழ் மக்கள் காணிகளை சத்தமின்றி வனப்பகுதியென பறித்துவருகின்றது.வெலிஓயாவிற்கு தனியாக பிரதேச செயலகத்தை தோற்றுவித்துள்ள அரசு மறுபுறம் தனியான பிரதேச சபையினை உருவாக்குவதில் தற்போது மும்முரம் காட்டிவருகின்றது.
ஏற்கனவே வவுனியாவின் இராசேந்திரக்குளம் பகுதியினில் பாரதிபுரம் விக்ஸ் காடு பகுதியை கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்களது எதிர்ப்பினால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.எனினும் அங்கு வாழ்ந்துவரும் மக்கள் நிச்சயமற்ற வாழ்வையே வாழ்ந்துவருகின்றனர்.
இது தொடர்பிலும் வனவளத்துறை மீது குற்றஞ்சாட்டி வடமாகாணசபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பினில் போடப்பட்டுள்ளன.இத்தகைய சூழலில் மீண்டும் வனவளத்திணைக்களம் மக்களது குடியிருப்புக்களிடையே புதிய எல்லைகளை போட்டு நிலப்பிடிப்பினில் மும்முரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comments