இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஆச்சரியங் களும் அதிசயங்களும் நிறைந்து கிடக்கின் றன.
உயிர்ப்பிலும் இறப்பிலும் அதற்கிடைப்பட்ட வாழ்விலும் காணப்படும் விந்தை பிரமிக்கக் கூடியவை.
இதில் ஒன்றுதான் வேட்டைவாளிகளின் வாழ்க்கையாகும்.
வேட்டைவாளிகள் முட்டை இட்டோ அன்றி குஞ்சு பொரித்தோ தம் இனத்தைப் பெருக்கு வனவல்ல.
மாறாக பிற புழுக்களைத் தூக்கி வந்து தான் கட்டி வைத்த மண்கூட்டில் அந்தப் புழுக்களை அடைத்துக் கொள்ளும்.
பின்னர் கூட்டின் வாசலில் இருந்தபடி ரீங் காரம் செய்யும். அவ்வாறு ரீங்காரம் செய்வ தனால் அந்தப் புழுக்கள் தன்னிலை இழந்து வேட்டைவாளிக் குளவிகளாக மாறிவிடும்.
இத்தகவல் விஞ்ஞான ரீதியில் ஏற்புடை யதா? என்பது ஆராயப்பட வேண்டும்.
ஆனால் வேட்டைவாளிக்குளவிகளின் இனப் பெருக்கம் இவ்வாறு நடப்பதாகத்தான் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
வேட்டைவாளி குளவிகள் இப்படியயான்றும் இனப்பெருக்கம் செய்வதில்லை. விஞ்ஞான ரீதியில் - பூச்சியியல் சிந்தனைகளுக்கு உங் கள் கருத்து உடன்பாடானதல்ல என்று நீங்கள் யாரேனும் மறுத்துரைத்தால் அதனை எழுந்து நின்று நிராகரிக்கப் போவதுமில்லை.
ஆக, வேட்டைவாளி குளவிகளின் இனப் பெருக்கம் பற்றிய தகவலை ஏற்றுக் கொண் டால், அதேமாதிரியான பல சம்பவங்கள் இந்த உலகில் நடந்து கொள்கின்றன.
இதில் இனம், மதம், மொழி என்பவற்றில் கூட வேட்டைவாளிச் செயற்பாடுகள் நடக்கின் றன.
அதிலும் அரசியல் கட்சிகளில் நடப்பவற்றை நினைக்கும்போது சிரிப்பதா? அல்லது கட்டாந் தரையில் நின்று ஓ! என்று அழுவதா? என்று புரியவில்லை.
ஆம், இலங்கைத் தமிழரசுக் கட்சி இப்போது வேட்டைவாளிகள் போல செயற்படுகின்றது. பிற கட்சியில் இருப்பவர்களை இழுத்து வந்து தன் கட்சியாக மாற்றுகிறது.
இச் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அட கடவுளே! இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் தனக்கான உறுப்பினர்களை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து உள்ளீர்ப்புச் செய்ய முடி யாமல் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்த்துக் கொள்கின்றது என்பதை உணர முடிகிறது.
அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒரு வரை தமிழரசுக் கட்சி தன்மயப்படுத்தியுள்ளது.
இதுபோல ஏலவே சில உறுப்பினர்கள் கூட்ட மைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் தேர்தலில் நின்றுவிட்டு பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளீர்ப்பில் தன்வயம் இழந்து போயினர்.
சில அரசியல் கட்சிகளை ஆயுதக் குழுக் கள் என்று விமர்சிக்கும் தமிழரசுக் கட்சி, தான் விமர்சிக்கும் கட்சி சார்ந்தவர்களைத் தன் பக்கம் இழுப்பது ஏன்? என்பதுதான் புரியாமல் உள்ளது.