இலங்கை கடற்படையால் பறிபோன மக்கள் குடியிருப்பு!


sri-lankan-navy.jpg

காரை நகர் மடத்து வெளி மாதிரி கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையினால் ,அப்பகுதி கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள் சங்கானை வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியில் மாவட்டத்திற்கு தலா 5இலட்சம் ரூபாய் பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு கிடைக்க பெற்றது. யாழ்.மாவட்டத்திற்கான வீட்டுத்திட்டத்தில் கிடைக்கப்பெற்ற 24 வீட்டு திட்டத்தினையும் காரைநகர் மடத்துவளவு மாதிரி கிராமத்திற்கு வழங்குவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
அந்நிலையில் குறித்த மாதிரி கிராமம் அமைந்துள்ள பகுதிகளை சூழவுள்ள 126 ஏக்கர் காணியை கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர். அதில் மடத்துவளவு மாதிரி கிராமத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் காணியையும் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தியுள்ளனர். மாதிரி கிராம மக்களுக்கு 24 வீட்டு த்திட்டம் கிடைக்க பெற்று உள்ளதால் அக்காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் , மக்கள் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் மாதிரி கிராமத்தை சேர்ந்த மக்கள் என பலரும் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இருந்த போதிலும் காணியை கடற்படையினர் விடுவிக்க இணக்கம் தெரிவிக்காது புதிய முள் வேலிகளை தாம் கையகப்படுத்திய காணிகளை சுற்றி அமைத்தனர். காணிகள் கடற்படையினரால் மாதிரி கிராம மக்களுக்கு கையளிக்கப்படாததால் மாதிரி கிராமத்திற்கு கிடைக்க பெற்ற வீட்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
இந்த வருட இறுதிக்குள் வீட்டு திட்ட பணிகள் ஆரம்பிக்கபடவேண்டிய கட்டாயம் இருந்தமையால் விரைந்து செயற்பட்ட அரச அதிகாரிகள் காரைநகர் மடத்து வளவு மாதிரி கிராமத்திற்கு கிடைக்க பெற்ற 24 வீட்டு திட்டத்தினையும் , சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அராலி வீசி வளவு மாதிரி கிராம மக்களுக்கு மாற்றி வழங்கியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila