பல கோடிக்களை கொள்ளையிட்டவர்கள், சொத்து விபரங்களை மறைத்தவர்கள் பிணையில் விடுதலை – பல்கலை மாணவர்கள் சிறையில்….



சிறைவைக்கப்பட்ட பல்கலைக்கழகமாண செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இலவச கல்விக்கான போராட்டத்தில் ஈடுபட்டத்திற்காக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட,  ஜினரத்தன தேரர் மற்றும் சனத் பண்டார ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று பிற்பகல்  இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக விடுதிப்பகுதியிலிருந்து சுலோகங்கள் மற்றும் பதாதைகளுடன் பிரதான வீதிக்குச் சென்ற  பல்கலைக்கழக மாணவர்கள்,  தமது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ‘எமது மாணவர் சங்கப்பிரதிநிதிகள் சுயநலத்திற்காக அன்றி மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களுக்காகவே போராடியானார்கள்.”கைது செய்யப்பட்ட மாணவர்கள் கோடிக்கணக்கான ரூபா சொத்துக்களை கொள்ளையிடவில்லை.’
‘2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தமது சொத்து விபரங்களை வெளியிட முடியாது ஒழித்திருக்கவுமில்லை.’ ‘முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்களைப் போல்   பல கோடி ரூபாவை கொள்ளையடவில்லை’ இவர்கள் எல்லோரும் தற்போது பிணையில் வெளிவந்து சாதாரணமாக நடமாடக்கூடிய நிலை காணப்படுகிறது.
எனினும்  மாணவர்களின்  உரிமைகளுக்காக போராடிய மாணவ  தலைவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது எந்தவகையில் நியாயமானது என இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila