ஆர்.கே. நகரில் 2016 தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி வித்தி யாசத்தைவிட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார்.
ஜெயலலிதா மறைவால் காலி யான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாள ராக சசிகலா உறவினர் டிடிவி தினகரன் உட்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.
கடந்த முறை பணப் பரிவர்த்தனைப் புகார் எழுந்தது போன்று இந்த முறையும் பணப் பரிவர்த்தனை புகார் எழுந்தது.
இதனால் இடைத்தேர்தல் நடக் குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பரபரப்பான சூழ்நிலை யில் 21ஆம் திகதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங் கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சுயேட்சை யாக போட்டியிட்ட டிடிவி தின கரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முடி வில் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் 50.32 சதவித வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார். அவ ருடைய ஆதரவாளர்கள் வெற் றியை கொண்டாடி வருகிறார்கள்.
சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகளை பெற்றார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிட்ட அ.தி.மு கவைச் சேர்ந்த மதுசூ தனன் 48,306 வாக்குகளை பெற்றார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகளை பெற்றார்.
இதற்கு அடுத்த இடங் களை நாம் தமிழர், பாரிய ஜனதா பிடித்தது. திமுக, பாரதிய ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர் கள் உட்பட 57 வேட்பாளர் கள் தேர்தலில் கட்டுப் பணத்தை இழந்தனர்.
தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு விழுந்த வாக்குகளைவிடவும் அதிகமான வாக்குகள் நோட்டா (எல்லோருக்கும் எதிரான வாக்கு) விற்கு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.