மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக போருக்கு முன் பாகவே சில பல ஆயத்தங்களை கிருஷ்ண பரமாத்மா செய்து விட்டார்.
போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தாலும் போரில் பாண்ட வர்கள் வெல்வதற்கான அத்தனை தந்திரோ பாய முயற்சிகளையும் கிருஷ்ண பரமாத்மா செய்யலானார். அதில் ஒன்று விதுரனின் வில்லை முறிப்பதாகும்.
வில்லுக்கு விதுரன் என் பதே புகழ்ச்சிக்குரியதாக இருந்தது. வில்வித்தை யில் அத்துணை வல்லமை பொருந்தியவன் விதுரன்.
குருசேத்திரப் போரில் விதுரன் வில்லெடுத்து போரிடுவானாக இருந்தால், பாண்டவர்களின் வெற்றி என்பது சாத்தியமற்றதாகும்.
எனவே விதுரன் வில்லை முறித்து போர்க் களம் புகமாட்டேன் என்று சபதம் செய்ய வேண் டும். இதனைச் செய்விப்பதற்கு கிருஷ்ண பரமாத்மா வியூகம் அமைத்தார்.
அந்த வியூகத்தின் விளைவாக கெளரவர் சபை கூடிய வேளையில் துரியோதனன் விதுர னைப் பார்த்து மிகமோசமான வார்த்தைகளால் நிந்திக்கின்றான்.
துரியோதனனின் தகாத வார்த்தைகளைக் கேட்ட விதுரன் கோபாவேசத்துடன் வில்லை முறித்து போரில் இறங்கேன் என்று சபதமும் எடுக்கலானான்.
வில்லுக்கு விதுரன் என்ற பெயரையே அடக்கிவிட்ட கிருஷ்ண பரமாத்மா, வீஷ்மர் கையில் இருக்கும் வில்லை நிலத்தில் போடத் திட்டம் தீட்டினார்.
அதற்காக குருசேத்திரத்தில் முதல் நாள் போரில் போர்க்களத்தில் நிற்கும் வீஷ்மரிடம் அருச்சுனனை அனுப்பி ஆசி பெற வைக்க,
அருச்சுனா! வெற்றி உமதாகட்டும். சிகண்டி என்பான் என் முன் தோன்றுகையில் என் கைவில்லை நிலத்தில் போடுவேன் என்றார் வீஷ்மர்.
ஆக, விதுரனின் வில்லை முறித்து; வீஷ்ம ரின் வில்லை நிலத்திடை வீச வைத்தே பாண்ட வர்களுக்கான வெற்றியை கிருஷ்ண பரமாத்மா உறுதி செய்தார்.
இந்தச் செய்தியைக் கூறும்போது இவை எதற்காக என்று கேள்வி எழுந்தால், தேர்தல் வந்த பின்பு வாக்காளர்களைத் தேடிச் செல்லு தல் என்ற திட்டம் வெற்றிக்கு பெருந்துணை புரியாது.
மாறாக, தேர்தல் வருமுன்னரே திட்டம் தீட்ட வேண்டும். வாக்காளர்களுக்கு உண்மையை எடுத்துரைத்தல் அவசியம்.
தேர்தலில் வெற்றி பெறாமல் போவது எம் இனத்துக்குக் கேடாகும் என்று கருதினால், பல அணிகள் கூறுபடாமல் ஒன்றுபடுவதே நல்லது.
அனைவரும் ஒன்றுபட்டு ஓர் இலக்குடன் பயணிக்கும்போது அதற்கு மக்கள் நிச்சயம் தங்கள் ஆதரவை வழங்குவர்.
எனவே எவ்வாறு அப்படி ஒன்றுபடுவது என்று சிந்திப்பது தேர்தலில் வெற்றி பெறுவ தற்கு மிகவும் முக்கியமானது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.