கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2017ம் ஆண்டுக்குரிய பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் வடமராட்சி வலய பருத்தித்துறை பாடசாலைகளின் முதன்மைப் பெறுபேறுகள் தெரியவந்துள்ளன.
வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் , கணிதப் பிரிவில் 5 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் ஒரு மாணவனும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
சி.துவாரகன், கா.புவிந்தாஸ், ர.ராகவன், இ.கிருஸ்ணலோஜன், த.தயாரூபன் ஆகியோரே கணிதப் பிரிவில் தெரிவாகியுள்ளனர்.த.தயாநிதி என்ற மாணவனே உயிரியல் பிரிவில் தெரிவாகியுள்ளார்.
இவர்களில் தயாரூபன், தயாநிதி ஆகிய இருவரும் சகோதரர்களாவர்.
அதேவேளை சி.துவாரகன் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேவேளை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கணிதப் பிரிவில் இரண்டு மாணவிகளும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 5 மாணவிகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
பொன்னுத்துரை - சுஜீதா மற்றும் ஆனந்தமூர்த்தி - சங்கீதா என்ற இரண்டு மாணவிகள் கணிதப் பிரிவிலும், குகநாதன் - துஷ்யந்தி, குமுக்கேசன் - மாதுமை, புவனேந்திரன் - துளசிகா, கிருஸ்ணசிங்கம் - மாதுளா, சிறீபவன் - சுஜீபா ஆகிய 5 பேரும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் வடமராட்சி மகளிர் கல்லுாரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் பெயர் விபரம் கிடைக்கப் பெறவில்லை.
Add Comments