உதயசூரியனுக்குள் உள்குத்தா? – கூட்டாளி கட்சிகள் மறுப்பு!



உடைகிறது உதயசூரியன்’ ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்க ளால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மாற்று அணியைச் சிதைப்பதற்கான வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக வும் அதன் ஒரு அங்கமாகவே தன க்கும் ஈபிஆர்எல்எவின் தலைவர்களு க்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்  பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி யை கவனிப்பதாகத் தெரிவித்து ள்ளார். 

என்ன செய்தாவது இக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று முயல்வோ ரின் எண்ணம் நிறைவேறாது அதற்கு என்னைப் பகடைக்காய் ஆக்கலாம் என்று யாராவது கனவு கண்டால் அது கனவில் மட்டும்தான் சாத்தியம் என்றார். 

இதனிடையே தமது கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வெளியா கிய தகவலில் உண்மையில்லை என்றும் இது தொடர்பில் செய்தி வெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரிடம் தான் விசனம் வெளியிட்டதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜனநாயகத் தமிழரசுக்கட்சியின் செயலாளர் சிவகரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை ஒற்றுமையாகவே இருக்கின்றோம். 

வருகின்ற 3ந்திகதி யாழ்ப்பாணத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறோம்” என்றார். இதேவேளை இச் செய்திகளின் பின்னணியில் சுமந்திரன் அணியின் பின்புலம் இருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. 

- நன்றி தமிழ்லீடர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila