தமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பதில் என்ன தவறு ?



தமிழர் தொன்மமும் - பண்பும்:
"காக்கை குருவி எங்கள் தமிழ்ச்சாதி", "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என மனிதர் அல்லாத பிற உயிர்களின் மீதும் பெரும் அன்பினை போதித்தவர்கள், அவர்களுக்காக கசிந்துருகியவர்கள் பாரிய பண்பாட்டு பெரு மைக்கும், கலாச்சாரத்திற்கும் உரிய எம் தமிழர்கள் என்றால் அதில் மிகை ஏதுமில்லை. 

அவைகளுக்கான எடுத்துக்காட்டாக  படர ஏதுமற்று நின்ற முல்லைக்கொ டிக்கு தம் தேரையே ஊன்று கோலாக அளித்த மன்னன் பாரி, குளிரில் நடு ங்கிய  மயிலுக்கு தம் போர்வையை ஈந்தளித்த பேகன், பசுக்கன்றின் மீது தேரை ஏற்றி கொன்று விட்ட காரண த்திற்காய் அதேபோல் மரண தண்ட னை விதித்திட்ட மனு நீதிச்சோழன், தவறான தீர்ப்பு வழங்கியதற்காய் தம் உயிரினைத் துறந்த பாண்டிய மன்னன் ஆகியோர்களெல்லாம். ஆக, இத்துணை தொன்ம ; பண்பாட்டு கலாச்சார பெரு மைகளுக்கு உரிய எம் தமிழினம் தான் இன்றைக்கு சொல்லொணாத் துயர்க ளுக்கு ஆளாகி கையறு நிலையில் நின்று கண்ணீர் சிந்துகின்றது.

அதற்கான காரணம், சரியான வழிகாட்டுதலும் ; தன்னலமற்ற தலைமை களும் இல்லாததன் காரணத்தினாலேயே.

வேண்டும் தன்னலமற்ற அரசியல் :


ஈழத்தில் தம் பூர்விக நிலத்தில், தமக்கான நாடு கோரி அற வழியில் ; ஆயுத வழியில் போராடி நின்ற மக்கள் மீது வல்லாதிக்க நாடுகள் யாவும் ஒருங்கி ணைந்து ஓர் பாரிய மனித உரிமை மீறல் போரினை தொடுத்த போதும், இங்கே தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தம் சுய நலத்துடனேயே சிந்தித்தார்களே தவிர, எம் இனம் ; எம் மக்கள் ; அங்கே கொத்துகொத்தாய் செத்து மடிபவர்கள் எம் தொப்பூழ் கொடி உறவுகளென எள்ளளவும் சிந்தித்திடவில்லை.

அதே சமயம், தமிழகத்திலும் இன்றைக்கு கல்வி, மருத்துவம் என அத்தியா வசிய துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் தனியார் மய பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் தலை விரித்து ஆடுகிறது. அவற்றை நெறிமுறைப்படுத்தவோ ; குடி மக்களுக்கான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றை தாமே முன்வரவோ எந்த அரசும் முன் வரவில்லை.

மக்களுக்கான அரசு : 


தை முதல் நாளே தமிழர்க்கு தமிழ்ப்புத்தாண்டு என்பதனை மாற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு எனவும் அறிவித்துள்ளது அதிமுக அரசு. ஆக, தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் நலன் என சிந்திக்கிற செயலாற்றுகிற சக்திகள் தமிழகத்தில் ஆட்சி பொருப்பினுக்கு வந்திடுமேயானால் நிச்சயம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இத்தகைய துயரங்கள் யாவும் களையப்படும் என்ப தில் ஐயமேதுமில்லை. 

அத்தகைய சக்திகளை ஆட்சிப்பொறுப்பில் அமரவை த்திடுவது மக்களிடத்தில் தான் உள்ளது என்பதிலும் மாற்று கருத்து ஏதுமில்லை. எனவே, மக்களிடத்தி லிருந்தே துவங்கட்டும் தமிழுக்கான ; தமிழர்களுக்கான இன்னுமோர் புரட்சி.


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila