
நேற்று புதுக்குடியிருப்பில் கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்காக துணுக்காய் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் மற்றும் ஏனைய பகுதியிலிருந்து வீட்டுதிட்ட கூட்டம் வந்தால் வீடு கிடைக்கும் என மக்களை அழைத்துவந்திருந்ததாகவும் கூட்டத்திற்கு வந்த மக்கள் சிலர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில் கடந்தமுறை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற காத்தவிராஜன் கூத்திற்கு மூன்று இலட்சம் ரூபாவிற்கு 30 பஸ்களில் 3000பேரை தான் கொண்டுவந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
கடந்த மகிந்த ஆட்சியின்போது ஈ.பி.டி.பி ஆயுதக்குழு எவ்வாறு மக்களை வேலை வாய்ப்பு,வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் தருவதாக ஏமாற்றி கூட்டங்களுக்கு அழைத்ததுபோல கூட்டமைப்பும் தொடங்குகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.