இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போருக்குப்பின்னர் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த செயற்பாட்டை வெளி உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது மனித உரிமைகள் செயற்பாட்டு அமைப்பொன்று.
பௌத்த மேலாண்மை என்ற பெயரில் திருகோணமலையை தளமாக கொண்டு செயற்படும் என்ற மனித உரிமைகள் மேம்பாட்டிற்கான பாதுகாப்பு நிலையம் என்ற அமைப்பு இந்த ஆவணப்படத்தினை தயாரித்து வெளியிட்டுள்ளது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்,வரலாற்றுத்துறை பேராசிரியர் சத்தியசீலன்,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா,பௌத்த,இந்து,இஸ்லாம் மதங்களின் மதகுருமார்கள் என பலர் தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
போருக்குப்பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தால் பௌத்த மதித்தின் பேரால் எவ்வாறு தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்பதை இந்த ஆவணப்படம் காட்டியிருக்கிறது
Add Comments