இன்று பட்டிப்பொங்கல். உழவுத் தொழி லுக்கு உறுதுணையாக இருந்த சூரியபகவா னுக்கு நேற்றைய தினம் பொங்கல் செய்து தங்கள் நன்றியைத் தெரிவித்த விவசாயிகள்,
இன்று தங்களுக்குப் பேருதவி புரிந்த எருது களுக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக பட்டிப்பொங்கல் செய்கின்றனர்.
நிலத்தை உழுது பயிரிடுவதற்கும் விவசாய உள்ளீடுகளையும் விளைபொருட்களையும் ஏற்றி இறக்குவதற்கும் உதவி புரிந்த எருது களுக்கும் பாலைப் பொழிந்து நம் ஆரோக் கியத்துக்குப் பேருதவி செய்வதுடன் எருவைப் பசளையாகத் தந்த பசுக்களுக்கும் நன்றி செலுத் துவதாகப் பட்டிப்பொங்கல் நிகழ்வு அமைகின்றது.
பெற்ற தாய்க்கு அடுத்த படியாக நமக்குப் பால் தரும் பசுக்களைத் தெய்வமாகப் போற் றும் மிக உயர்ந்த பண்பாடு நம் தமிழினத்துக்கு உண்டு.
அம்மா என்ற தமிழின் அகரத்தையே பசுக் களும் உச்சரிக்கின்றன. இந்த உலகப் பிரபஞ் சத்தில் அம்மா என்ற ஓசையுடன் கத்துகின்ற பசுக்கள் தாயாக இருந்து பாலைத் தருவதால் தாய்க்கு இணையாக பசுக்களைப் போற்று கின்ற மரபு நம் வாழ்வியலில் பேணப்படுகின் றது.
எனினும் இன்றைய அந்தரமான சூழ்நிலை யில் பசுக்களை வெட்டிக் கொன்று அதன் இறைச் சியைப் புசிக்கும் கொடூரம் நம் தமிழ் மண்ணில் நடந்தேறுவது வேதனைக்குரியது.
ஒரு பசுவை வெட்டி இறைச்சியாக்குவ தென்பது பெற்ற தாயை வெட்டிப் புதைப்பதற்கு ஒப்பானது.
எனினும் பசு வதையைத் தடுப்பதற்கு பசுக் களை இறைச்சிக்காக வெட்டுவதற்குமான தடைகள் சட்டரீதியாக ஏற்படுத்தப்படாமையால் இன்று வரை பசுக்கள் களவாகவும் சட்டரீதி யாகவும் இறைச்சியாக்கப்படுகின்றன.
இத்தகைய செயல் இந்த நாட்டில் மிகப் பெரிய தோசத்தையும் பாவத்தையும் ஏற்படுத்த வல்லது என்பதை உணர்வது அவசியம்.
பசு வதையை எதிர்த்து போராடிய நம் சைவப் பெரு வள்ளல்கள் வாழ்ந்த இந்தச் சிவபூமியில் பசுவதை நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால் நேற்றைய தைப்பொங்கல் திரு நாளில் கூட, நம் மண்ணில் மாட்டிறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது எனில்,
எங்கள் பண்பாட்டுக்கும் செயலுக்குமான தொடர்பு என்ன? என்ற கேள்வி எழவே செய்யும்.
எனவே பசுவதையை முற்றாக நிறுத்து வதற்கும் பசுக்களை இறைச்சிக்காக வெட்டு வதை அடியோடு தடுப்பதற்கும் அறம் காக்க வல்லவர்கள் முன்வரவேண்டும்.
இதைச் செய்யத் தவறுகின்றபோது, வெட் டப்படும் பசுக்கள் அம்மா என்று அவலக்குரல் எழுப்பி உயிர்விடும் பாவம் யாரையும் சும்மா விடாது என்பதையேனும் இன்றைய பட்டிப் பொங்கல் திருநாளில் உணர்ந்து கொண்டால் அதுவே பெரிய மாற்றமாகும்.