தேர்தல் விதிமுறையை மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (24.01.2018) புதன்கிழமை யாழ் நகரப்பகுதியில் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில் ஈடுபட்டது.
இன்று பிற்பகல் வேளையில் யாழ் புறநகர்ப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகரசைபை வேட்பாளர் இம்மானுவேல் ஆன்னோல்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் விதிமுறையில் வேட்பாளருடன் 10 இற்கும் குறைவானவர்களே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்றும் பேரணிகள் ஊர்வலங்களுக்கு தடைவிதிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விதிமுறைகளை மதிக்காது பொலிசாரின் பாதுகாப்புடன் மேள வாத்தியங்கள் இசைக்கவிட்டு வீதிகளில் மக்கள் போக்குவரத்தை முடக்கியவாறு நூற்றுக்கணக்கானவர்களுடன் தேர்தல் பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்னோல்ட் தேர்தல் பிரச்சார பேரணியில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது