கூட்டமைப்புடனான கட்சியினரை விமர்சித்த உதயன் ஆசிரியர் பீடம் ! சிறீதரன் எம்பி இணையம் மீள்பிரசுரம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பங்காளிக் கட்சிகளையும் வடக்கு முத ல்வர் சி.வி.விக்னேஸ்வரனையும் வன்மையாக விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உதயன் நாளிதழ் ஆசிரியர் தலையங்கம் விவ ரித்துள்ளது. 
உதயன் பத்திரிகை மிகக் கடுமையாக விமர்சித்து வெளியிட்டிருக்கின்ற ஆசிரியர் தலையங்கத்தினை நாடா ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத ரனின் இணையத்தளம் மீள்பிரசுரம் பிரசுரித்துள்ளது. 

எதிர்வரும் தேர்தல்களில் தமிழரசு க்கட்சி தனித்தே போட்டியிடுமென சம்பந்தன் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவித்திருப்பதாக தக வல் வெளியாகியுள்ளன. ஊடக முதலாளிகளாக தெரிவிக்கப்படுகின்ற நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் தமிழரசு க்கட்சியில் எதிர் எதிர் துருவங்களாக செயற்பட்டு வருகின்றார்கள். 

சம்பந்தனின் கருத்தினை மெய்ப்பிக்கும் வகையிலேயே உதயன் ஆசிரியர் பீட த்தின் கருத்து அமைந்திருக்கின்ற அதேவேளை சிறிதரனின் ஊடகம் அதனை மீள்பிரசுரம் செய்து தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

பச்சோந்திகள், புல்லுருவிகள் போன்ற கீழ்த்தரமான பதங்கள் ஊடாக கூட்டா ளிக் கட்சிகளையும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனையும் பத்திரிகை யில் குறிப்பிட்டும் அதனை இணையத்தில் மீள்பிரசுரம் செய்தும் தமிழரசு க்கட்சியின் ஊடக ஊதுகுழல்கள் செயற்பட்டுள்ளமை யாழ்ப்பாணத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila