கூட்டமைப்பில் ஒருவருக்கு இரண்டு கோடி ஆனால் முன்னாள் போராளிகளுக்கு ஓடுவதற்கு சைக்கிள் கூட இல்லை



கூட்டமைப்பில் ஒருவருக்கு இரண்டு கோடி வாங்கியிருக்கிறார்கள் ஆனால் முன்னாள் போராளிகளுக்கு ஓடுவதற்கு சைக்கிள் கூட இல்லை என முன்னாள் போராளியும் புனர்வாழ்வுபெற்ற தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அமைப்பாளருமான இன்பராசா தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கு தலா இரண்டு கோடி ரூபாய் பெற்றிருக்கின்றார்கள் ஆனால் எமது கட்சிக்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் இல்லை. அதைவிட ஓடுவதற்கு சைக்கிள் கூட இல்லை. நாங்கள் போராடும் போது எதிரிகளாகவும் துரோகிகளாகவும் இருந்தவர்கள் போராட்டம் முடிவடைந்து நாங்கள் வந்து ரோட்டில் நிக்கின்றோம் அரசுடன் நின்று ஆட்சியமைகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் கூட எவ்வளவு செல் வீச்சுக்கள் என பல துன்பங்களை அனுபவித்த நாங்கள் இன்னமும் துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து கொண்டுதான் உள்ளோம். இந்த வட்டக்கச்சி மண்ணில் கூட இந்த மண்ணை விடக்கூடாது என்பதற்காக இறுதிவரை போராடினோம்.
இவ்வாறு பல போராட்டங்களை செய்தது நாங்கள். ஆனால் இப்பொழுது எங்கள் நிலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பல போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள் நாட்டுக்காக போராடிய நாங்கள் ரோட்டில் நிற்கின்றோம். மனம் நொந்து பேசுகின்றேன் போராளிகளை துக்கிவிடாது விட்டாலும் பரவாயில்லை தயவு செய்து மதிக்கப் பழகுங்கள்.
இதனால் தான் நாம் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அரசியலில் களம் இறங்கி இருக்கின்றோம். உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் போராளிகளுக்கு நாங்கள் குரல்கொடுக்க வெற்றி பெற செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila