“...கெட்டாலும் மேன்மக்களே சங்கு சுட்டா லும் வெண்மை தரும்” என்கிறது ஔவை யாரின் மூதுரை. இதன் அர்த்தம் ஆழமானது.
மேன்மக்கள் என்று போற்றப்படுவோர் என் றும் உயர்ந்த பண்புடையவர்கள்.
ஆக, உயர்ந்த பண்பும் பக்குவமும் யாரிட மெல்லாம் இருக்கிறதோ அவர்கள் மேன்மக் கள் என்ற வகுதிக்குள் அடக்கப்படுவர்.
இவ்வாறான மேன்மக்கள் உயரிய பதவி களில் இருக்கும்போது அவர்கள் எப்போதும் மற்றவர்களை மதித்து தமது பணியை முன் னெடுப்பார்கள்.
இத்தகையவர்களிடம் நேர்மை, தாளா ண்மை, இரக்கம், ஈகை என அனைத்தும் அதீதமாக இருக்கும்.
முன்கோபம், சினம், ஆத்திரப்படுதல், இன் னாச்சொல் என்ற தீய குணங்களுக்கு அறவே இடமிருக்காது. இவை மேன் மக்களின் சால்பு.
எனவே மேன்மக்களைப் பதவியில் இருத்து வது அல்லது பதவிக்கு வந்த பின்பேனும் உயர்ந்த பண்பாட்டுக்கு ஆட்படுவது என்ற விட யங்கள் நடந்தாக வேண்டும்.
இது விடயத்தில் பொதுமக்களின் வகிபங்கு என்பது காத்திரமானது. குறிப்பாக அரசியல் சார்ந்த பதவிகளில் மேன்மக்களைத் தெரிவு செய்வது பொதுமக்களின் கடமையாகும்.
இங்கு மேன்மக்கள் என்று ஔவையார் குறித்துரைப்பது இன, மத, மொழி, சமய, சாதி பேதங்களை அல்ல.
மாறாக ஒருவரிடம் இருக்கக்கூடிய உயர் ந்த குணம்; உயர்ந்த பண்பாடு; உயர்ந்த ஒழுக் கம் இவற்றை மையப்படுத்தியே மேன்மக்கள் என்பதை ஔவையார் வரையறுக்கிறார்.
அண்மையில் ஊவா மாகாண முதல மைச்சர், பெண் அதிபர் ஒருவரை தன்முன் மண்டியிட வைத்து கரம் கூப்பி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இப்போது நாடுபூராகவும் செய்தியாகப் பரவி பலரையும் அதிர்ச்சிப்படுத்தி யுள்ளது.
ஒரு மாகாணத்தின் முதலமைச்சர், பெண் அதிபரை தன் முன் மண்டியிட வைத்து மன் னிப்புக் கேட்க வைத்தார் என்றால், அவரின் குண இயல்பு, அவரின் அடிப்படைப் பண்பு எவ்வாறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.
ஈவு, இரக்கம், மனிதநேயம்மிக்க எவரும் இந்தச் செயலை மன்னிக்க மாட்டார்கள். முன்பு மேர்வின் சில்வா என்பவர் ஒரு அரச உத்தியோகத்தரை மரத்தில் கட்டி வைத்தார்.
இப்போது ஊவா மாகாண முதலமைச்சர் பெண் அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார் எனில் இலங்கையில் சன நாயகம் இருக்கிறதா? என்ற கேள்வி எழவே செய்யும்.
எதுஎவ்வாறாயினும் ஊவா மாகாண முதலமைச்சரைப் பதவி விலகச் செய்யாவிட் டால் சின்னத்தனமான செயல்கள் மலியவே செய்யும்.