996ஆம் ஆண்டு நாவற்குழியில் காணாமல் போனோர் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாவதன் மூலம் இலங்கை அரசு பொறுப்பாளிகள் ஆகின்றனரா? யாழ் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி குமாரவடிவேல் கேள்வி
இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட நபர் தரப்பில் சட்டமா
அதிபர் திணைக்களம் ஆஜராகு மிடத்து அரசும் பொறுப்பு (ளுவயவந சுநளிழளெiடிடைவைல) கூறுகின்றதா? அல்லது தனிப்பட்ட நபருக்கு தான் பொறுப்பு என்றால், இலங்கை மக் களுடைய வரிப்பணத்தில் செயற் படுகின்ற சட்டமா அதிபர் திணைக் களம் எவ்வாறு குற்றம் இழைத் திருக்க கூடிய இராணுவ ஜெனர லுக்கு ஆஜராகுவார் எனவும் சுட் டிக்காட்டியுள்ளார்.
நாவற்குழி பிரதேசத்தில் 1996 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான மூவருடைய ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை நேற்றையதினம் யாழ்.நீதிமன்றில் நடைபெற்ற போதே மேற்கண்ட கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கில் முதலாம் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி மேஐர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டி கெலான சார் பில் சட்டமா அதிபர் முன்னிலை யாகுவது தொடர்பாக மனுத் தாரர் தரப்பு மற்றும் அரச தரப்பு தமது நியாயங்களை எழுத்து மூலம் சமர்ப் பணமாக சமர்ப்பிக்க யாழ்.மேல் நீதி மன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ் செழியன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றையதினம் குறித்த வழக்கா னது யாழ்.மேல் நீதிமன்றில் விசார ணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மனுத்தாரர் சார்பில் சட்டத் தரணி சுபாஜினி மற்றும் சட்டத்தரணி குருபரன் ஆகியோர் முன் னிலையாகியிருந்தனர்.
இதேபோன்று முத லாம் எதிரியான முன் னாள் நாவற்குழி இரா ணுவ முகாம் பொறுப் பதிகாரியான தற்போ தைய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டி கெலான, இரண்டாம் எதிரியான இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க (அலுவலக ரீதியாக) மற்றும் மூன்றாம் எதிரி யான சட்டமா அதிபர் (அலுவலக ரீதியாக) ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் முன்னிலை யாவதாக அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுக்கு தெரிவித்தார்.
இதன்படி நேற்றைய வழக்கு விசாரணை யின் போது முதலாம் எதிரியான முன்னாள்; லெப்டினன்ட் கேணலும் தற்போதைய மேஜர் ஜெனரலுமான துமிந்த கெப்பிட்டி பெலான சார்பில் அரச சட்டவாதி ஆஜராவது தொடர் பாக மனுதாரர் சட்டத்தரணிகள் தமது ஆட் சேபனையை முன்வைத்தனர்.
குறிப்பாக சர்வதேச மனிதவுரிமை சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவற்றினையும், உயர் நீதிமன்றங்களில் இடம்பெறுகின்ற சித்திரவதை வழக்குகளை மேற்கோள்காட்டி வாதிட்டிருந்தார். அதாவது குறித்த முதலாம் எதிரியான குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிரான சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த. 2002,2003 ஆண்டு வழக்குகளில் இவ் இராணுவ அதிகாரியே பொறுப்புக் கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அந் நபர் மீதான தனிப்பட்ட குற்றவியல் பொறுப்பு காணப்படும் போது அவர் சார்பாக சட்டமா அதிபர் ஆஜரா வதானது குறித்த காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக் கூறுகின் றதா என்ற கேள்வி எழுகின்றது.
உயர் நீதிமன்றங்களில் சித்திரவதை வழக்குகள் இடம்பெறுகின்ற போது அது தொடர் பில் சட்டமா அதிபர் முன்னிலை யாவதில்லை. இவ்வாறான நிலையில் குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக உண்மையானது நிரு பிக்கப்படும் போது அரசாங்கம் கூட்டுப்