இன்று தைப்பொங்கல். தமிழர் திருநாள் என்று போற்றப்படும் இந்நாளில் சூரியபக வானுக்கு பொங்கிப் படைத்து நன்றி செலுத்து கின்ற நாள்.
இந்தப் பூமியில் வாழும் மனித சமூகத்துக்கு உணவை ஆக்கித் தரும் விவசாயிகளுக்கு சூரியனே கண்கண்ட தெய்வம்.
சூரியன் இல்லை எனில் உணவுப் பொருட் களின் உற்பத்தியும் இல்லை என்றாகிவிடும்.
எனவே கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியபகவானுக்கு பொங்கிப் படைத்து அவ னுக்கு நன்றி செலுத்துவதை தமிழ் மக்கள் தங்கள் தலையாய கடமையாகக் கொண்ட னர்.
தமிழர்களின் பண்பாட்டில் நன்றி செலுத் துதல் என்பது முதன்மையானது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு என்று வள்ளுவர் கூறியதற்குள், தமிழ் மக் கள் நன்றி செலுத்துவதில் எத்துணை தூரம் கவனம் செலுத்தினர் என்பது தெரிய வரும்.
நிலத்தை உழுது பயிரிட்டு உணவுக்கு வழி வகுத்த விவசாயிகள் தங்களின் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த சூரியபகவானுக்கு புத்தரிசி எடுத்து பொங்கல் செய்து தம் விளை நிலங்களில் உற்பத்தியாகிய தானியங்களை யயல்லாம் படையலாக்கி சூரியனை வழிபட்டு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வர்.
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்ற உயர்ந்த பண்பாடு தமிழர்களிடம் இருப்பதன் காரண மாக அவர்கள் இயற்கையை எந்தளவு தூரம் போற்றினர் என்பதும் தமிழர் என்ற இனம் வேளாண்மை செய்வதை தெய்வீகப் பணியாக நினைத்தனர் என்பதும் இதனூடு விளங்கிக் கொள்ள முடியும்.
எனினும் இன்றைய சமகாலத்தில் பொங் கலுக்கான அத்தனை பொருட்களும் வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்வதைக் காண முடிகின்றது.
வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து நெல் லும் பயறு, உழுந்து உள்ளிட்ட தானியங்களும் வீட்டு வளவில் விளைந்து முற்றிய முக்கனி களும் கிணற்றடியில் ஓங்கி வளர்ந்த கரும்பும் கமுகம் பாக்கும் வெற்றிலையும் முற்றத்துத் தென்னை தந்த இளநீரும் பின்வளவில் கட்டி நிற்கும் பசு தந்த பாலுமாகப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து;
அயல் அட்டம் உறவுகள் எனத் தேடிச் சென்று இன்சுவை பொருந்திய பொங்கல் கொடுத்து பிறந்த தைத் திங்கள் இனிமையாகட்டும் என்று வாழ்ந்த எங்கள் வாழ்வு எங்கே என்பது கேட்கு மளவில் நிலைமையாயிற்று.
வேளாண்மை செய்த மரபெல்லாம் மறைந் தோடி; பசு வளர்த்து பால் கறந்து கற்கண்டு கலந்து பருகிய காலமெல்லாம் போய்,
இப்போது மில் அரிசியும் உடைத்து வறுத்து பொலித்தீனில் அடைத்த பயறும் பைக்கற் பாலு மாகப் பொதி செய்த பொட்டலத்தை அவிழ்த்து அதனைப் பொங்கிப் படைத்து பொங்கல் கொண்டாடும் நிலையை நாம் மாற்றுவது எங் ஙனமோ என்று ஏங்கினாலும் இன்றைய தைப் பொங்கல் தமிழர்களுக்கு புதுமை செய்யட்டும் எனப் பிரார்த்திப்போமாக.