தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்களின் வாழ்நாளில் பெரும் பகுதி சிறைக்குள் முடிந்து விட்டது.
எனினும் அவர்களை விடுதலை செய்வதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரை நடந்தாக வில்லை.
மிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்களின் வாழ்நாளில் பெரும் பகுதி சிறைக்குள் முடிந்து விட்டது. இதுவிடயத்தில் நல்லாட்சி மட்டுமல்ல நம் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்று தங்களைக் கூறிக் கொள்வோரும் தமிழ் அரசி யல் கைதிகளின் விடயத்தில் மெத்தனப் போக்கையே கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் உடன்பாடில்லை என்பதே உண்மை.
அவ்வாறான உடன்பாடு இருந்திருந்தால் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறி சேனவை ஆதரித்தபோது, நீங்கள் வெற்றி பெற்றால் தமிழ் அரசியல் கைதிகளை விடு தலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை எழு தப்பட்டிருக்கும்.
மாறாக தமிழ் அரசியல் கைதிகளை விடு வித்தே ஆக வேண்டுமென்று தமிழ்த் தலைமை நினைத்திருந்தால் அரசுக்கான ஆதரவை கைவிட வேண்டிவரும், எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தூக்கி எறிவேன், பாராளுமன்றத் தைப் பகிஷ்கரிப்போம் என்றெல்லாம் அரசாங் கத்துக்கு எச்சரிக்கை செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு எதனையும் அவர்கள் செய்ய வில்லை.
ஆக, இதிலிருந்து நாம் வரக்கூடிய முடிவு தமிழ் அரசியல் தலைமைக்கு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் உடன்பாடில்லை என்பதுதான்.
எதுவாயினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுப்பது மிகவும் அவசியமானது.
அந்த வகையில் இன்று வட மாகாணம் தழுவிய கதவடைப்புப் போராட்டத்துக்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இவ் அழைப்பை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமிழ் மக்கள் வட மாகாணம் முழுவதிலும் பூரண ஹர்த்தாலை அனுஷ்டிப்பர் என்பது உறுதி.
அதேநேரம் நாளைய தினம் தேசிய தமிழ் விழா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதா னத்தில் நடைபெறுகின்றது.
சுமார் 5000 மாணவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தேசிய நிலையில் தமிழ் மொழிப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாண வர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந் தர், வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தமிழ்த் தேசிய விழா சிறப்பாக நடைபெறுவதற்கும் எங் கள் மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங் கேறுவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கு வது நம் தலையாய கடமையாகும்.
ஏனெனில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் தேசிய தமிழ் விழா தமிழ் பேசும் மாணவர்களுடன் சார்ந்தது.
எனவே இந்த நிகழ்வு சிறப்பாக அமையும் பொருட்டு எந்த எதிர்ப்புக்களையும் காட்டாமல் அமைதி காக்க வேண்டும்.
தவிர, தேசிய தமிழ் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய தமிழ் விழா மேடையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிய செய்தியை அறிவிக்க வேண்டும்.
இதை அவர் செய்யும்போது, தமிழ் மொழிக் கான விழாவில் இன ஒற்றுமையும் வலுப்பெறு வதாக இருக்கும்.