கண்ணகி மற்றும் காளி தெய்வங்களின் படங்களை வைத்து பூஜை செய்து வித்தியாசமான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று காலை குறித்த போராட்டத்தினை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
கடந்த அரசாங்கத்தின் பல உண்மை முகங்களை அம்பலப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பலரிடம் நீதிகேட்டு கிடைக்காத பட்சத்தில் இன்று நீதி தேவதையிடம் அமைதியான முறையில் பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம் பலரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.