இமையாணன் மத்திய விளையாட்டு கழக மைதானமே தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கப்படவில்லை.
அந்த பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஒருவர், விளையாட்டு கழக மைதானத்தை பிரசாரத்திற்காக கோரியிருக்கிறார். எனினும், விளையாட்டு கழக தலைவரான ரூபாகரன் என்ற நபர், அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர், மைதானத்தை வழங்க முடியாதென மறுத்துள்ளார்.
அங்கஜன் இராமநாதன் சிறிய நிதி வழங்கினார் என்று கூறியே, மறுக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழரசுக்கட்சியின் பிரச்சாரக்கூட்டத்திற்கு அவர் மைதானத்தை திறந்துவிட சம்மதித்துள்ளதாக தெரியவருகின்றது.