முற்றியது மோதல்! சுமந்திரனுக்கு எதிராக ஊடகத்தை கையிலெடுத்த சிறீதரன்!


sri mp

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முதல்வரை நியமிப்பது தொடர்பில் ஏற்பட்ட இழுபறி நிலையினை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தன்னுடைய ஊடகத்தின் மூலம் கருத்துக்களை பதிவிடத் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.
சிவஞானம் சிறீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறில் தரப்பாகவும், சுமந்திரன் ஆனோல்ட் தரப்பாகவும் யாழ்.மாநகரசபை முதல்வர் கதிரைக்காக முட்டிமோதிவந்திருந்தனர்.
இந்த நிலையியில் சிறிதரனின் குடும்ப ஊடகமான இணையத்தளத்தில் சுமந்திரனின் அணி வெளியேற்றம் எனத் தெரிவிக்கப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் இதுவரை தமிழரின் ஏகோபித்த கட்சியாக இருந்துவந்த தமிழரசுக் கட்சிக்கு வாக்கு வங்கியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் கட்சியின் பல 2 மட்ட தலைவர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் இந்த வீழ்ச்சிக்கு காரணம் சுமந்திரன் அணி தான் என்று கட்சியில் பரவலான குற்றச்சாட்டுக்கள் வருகின்றன.
சுமந்திரன் அணி தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முதல்வர் விக்கி மேல் எடுத்த நம்பிக்கையில்ல பிரேரனை, தனக்கு வாக்களித்த மக்கள் கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டங்களில் STF உடன் சென்றமை, அங்கு மக்களை பொலீசார் மூலம் சோதனை செய்ய வைத்தமை போன்றமையும்.
தமது சுயநலன்களுக்காக மத்திய அரசில் ரனிலுடன் நெருக்கமாக இனைந்து செயற்படுவது போன்ற காரணங்களால் மக்கள் மத்தியில் சுமந்திரன் அணி மீது பாரிய வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இந்த காரணங்கள் நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை சரிவுக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் சுமந்திரன் மீது கடும் அதிருப்தியில் இருந்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தீர்க்கமான முடிவுகளை எடுத்திருப்பதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீர்வுத்திட்ட உருவாக்கத்தில், பேச்சுவார்த்தைகளில்,வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான தொடர்புகளை ஏற்படுத்துவதில் மாத்திரம் மட்டும் சுமந்திரன் செயற்படட்டும் என்றும் கட்சி அரசியலிலோ அல்லது கட்சியின் உயர்மட்ட முடிவுகளில் எவ்விதம் கொண்டும் தலையிட கூடாது என்று கடுமையான முடிவுகளை எடுத்திருப்பதாக அறிய முடிகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila