மணிவண்ணனிற்காதரவாக நால்வர் ராஜினாமா?


tnpf

உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 வீத ஆசனம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற முடிவினை மாற்றியமைக்க அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
எனினும் பெரும்பாலான கட்சிகள் பெண்களிற்கு இடம் வழங்குவது தொடர்பில் பெரும் குழப்பத்தில் உள்ளன.
யாழ்.மாநகரசபைக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்ட மணிவண்ணன் பட்டியினூடாக உள்ளே வர திட்டமிட்டிருந்தார்.எனினும் அக்கட்சி பெற்ற 3 மேலதிக சலுகை ஆசனங்களில் பெண்களே உள்ளே வரமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளதால் மணிவண்ணன் உள்ளே வருவது குழப்பமாகியுள்ளது.
எனினும் வட்டார அடிப்படையில் வெற்றிபெற்ற நால்வர் தமது பதவியை ராஜினாமா செய்து மணிவண்ணனிற்கு வழிவிட முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.மாநகரசபையில் பலமான எதிர்கட்சியாக செயற்பட வேண்டிய தேவை முன்னணிக்கு கிட்டியுள்ளது.
ஆட்சி அமைக்கும் கூட்டமைப்பிற்கு ஈபிடிபி மற்றும் ஜதேக ஆதரவளிக்க முன்வந்துள்ளதால் தற்போது பெரும்பான்மையுடன் முன்னணியே வெளியே உள்ளது.அதனால் முன்னணியே எதிர்கட்சியாகவுள்ளது.

இதனிடையே மறுபுறம் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளர்களும் விகிதாசாரத்தில் பெயர் குறிப்பிட்ட பெண் வேட்பாளர்களும் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
வட்டார அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண்களில் சிலர் தற்போது பதவியைப் பெறுவதற்காக கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நெருக்கம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது.
வட மாகாணசபை உறுப்பினர் ஒருவருடனும் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனும் பெண் வேட்பாளர் ஒருவர் அடிக்கடி கொழும்பிற்கு தனியாகச் சென்று வந்ததாகவும் அதனேலேயே குறித்த பெண் வேட்பாளருக்கு தேர்தலில் இடம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனினும் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து விகிதாசார பிரதிநிதித்துவத்துவ பட்டியலில் அவரை உறுப்பினராக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்றுவருகின்றது.
ஆயினும் குறித்த நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் இதில் மும்முரமாக முயற்சித்து வருவதாக சொல்லப்படுகின்றது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila