பிரித்தானியாவில் வாழும் விடுதலை புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே புலம்பெயர் சிங்களவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டன் நகரிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலை புலிகள் ஆதரவாளர்களின் செயற்பாட்டுகளுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட ஏனைய அமைப்புகளுக்கு வழங்கப்படாத சலுகைகள், விடுதலை புலிகளுக்கு வழங்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் கோஷமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.