வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டம் தமிழ் பேசும் மக்களை அதிகமாக கொண்ட ஒரு மாவட்டமாகும். தற்போது திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பல தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இடம்பெற்றுள்ள நிலையில், வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
|
இதற்கான வேலைகள் புதிதாக வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் சோமரட்ன விதான தலைமையில் இரகசியமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
|
வவுனியா மாவட்டச் செயலக வளாகத்துக்குள் புதிய விகாரை?
Related Post:
Add Comments