
இவ் விவகாரத்தில் உடனடி விசார ணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவ ர்கள் மீது சட்ட நடடிக்கை எடுக்கு மாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரி த்துள்ளாா்.
அம்பாந்தோட்டையிலுள்ள தேசிய பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் குருநாகலில் நடைபெற்ற பாட சாலை அதிபர்களுக்கான இராணுவத் தலைமைத்துவப் பயிற்சி பட்டறையின்போது 40 அடி உயரத்தில் கயிற்றில் நடந்த வேளையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கம்பஹாவில் இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சி யின்போதும் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட இச் சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இந்த இராணு வத் தலைமைத்துவப் பயிற்சி இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு தெரி வித்துள்ளது.
இந் நிலையில் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாட சாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சியானது எவ்வகையிலும் பொருத்த மான ஒன்றல்ல என்பதை தெரிவித்திருந்தும், ஸ்ரீலங்கா அரசாங்கம் அதனை வேண்டுமென்றே முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
“கடந்த 2013ஆம் ஆண்டு கம்பஹா ரத்தொழுவ பாடசாலையைச் சேர்ந்த அதி பர் டபிள்யூ. விக்ரமசிங்க என்பவர் தித்தெனிய பகுதியில் நடைபெற்ற இராணு வத் தலைமைத்துவப் பயிற்சியின்போது திடீரென உயிரிழந்தார். அதனைய டுத்து இப்பயிற்சி இடை நிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது அந்த பயிற்சிகளை மீண்டும் கல்வியமைச்சு அளித்து வரு கிறது. கேர்ணல் பதவிகளை வழங்கும் இந்த பயிற்சியானது பாடசாலை அதிப ர்களுக்கு அநாவசியமான ஒன்றாகும். கல்வி அமைச்சு தனியார் நிறுவன ங்கள் ஊடாகவே இப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
இதனிடையே அம்பாந்தோட்டையிலுள்ள தேசிய பாடசாலை பெண் அதிபர் பயிற்சியின்போது கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கல்வியமைச்சின் உயரதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு மேலும் 11 அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் குறித்த தனியார் நிறுவனத்தின் ஊடாகவே இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதனால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவர் மீதும் விசா ரணை நடத்தப்படாதிருப்பது ஏன்? உலகில் கல்வித்துறை ரீதியான முன்னெடு க்கப்படுனின்ற மாற்றங்கள். மாணவர்கள் எதிர்கொள்கின்ற நவீன நுட்பங்கள் ரீதியிலான சவால்கள் என்பனவற்றையே கல்வியமைச்சு அதிபர்களுக்கு கற்றுக்கொடுக்க வழிசமைக்க வேண்டும்.
மாறாக இராணுவ பயிற்சிகளும், தலைமைத்துவப் பயிற்சிகளும் அநாவசிய மாற்ற ஒன்றாகும். எனவே உடனடி நடவடிக்கை வேண்டும். இந்நிலையில் உயிரிழந்த அதிபரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும். ஏனைய விட யங்களைப் போல ஏமாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள க்கூடாதெனத் தெரிவித்துள்ளாா்.