வவுனியா மாவட்ட செயலகத்தில் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வருகிறது புதிய வழிபாட்டு தலம்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரைக்கான அத்திவாரம் வேலைகள் இன்றிரவு இரவோடிரவாக நடந்தமை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கசிந்த தகவலையடுத்து மாவட்ட செயலகத்திற்கு ஊடகவியலாளர்கள் இன்றிரவு விரைந்திருந்தனர்.
அச்சமயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஓர் அத்திவாரம் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்து அவர் இலங்கையில் வாழும் மூவின மக்களும் வழிபடுவதற்குரிய வழிபாட்டு தளம் ஒன்றை ,ஒரே கூரையின் கீழ் வழிபடுவதற்கேற்றவாறு தளம் ஒன்றை அமைப்பதற்காகவே அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை விடயம் சூடுபிடித்துள்ளமை தெரிந்ததே.