தமிழர் விடுதலைக் கூட்டணியின் சொத்துக்களினை முறையற்ற விதத்தில்; விற்பனை செய்துவருகின்றதாக வீ.ஆனந்தசங்கரி மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதனிடையே கூட்டணியின் தலைவரை தாக்கியதாக செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியம் குறித்த முறைப்பாட்டை இன்று பதிவு செய்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் சொத்துக்கள் பலவற்றினையும் தன்னிச்சையாக கட்சி செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விற்பனை செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில்; செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்று (02) காலை கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிரமணியம், தலைவர் மற்றும்; பொருளாளருக்கு அறிவிக்காது கலந்துரையாடலை நடாத்துகின்றீர்கள், இவ்வாறு நடப்பது தவறானது, என தெரிவித்துள்ளார். இதன்போது, ஆனந்தசங்கரி அவரை தாக்கியுள்ளார்.