கடவுள் மனிதனுக்குமிடையில் நடக்கின்ற போட்டி பற்றி நாம் யாரும் தெரிந்து கொள் ளவோ அன்றி அறிந்து கொள்ளவோ ஆர்வப் படுவதில்லை.
ஆனால் மனிதனைப் படைத்த கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதனைப் படைத்தாரோ அந்த நோக்கத்தை மீறி - அதை விலக்கி தேவை யற்ற பாதையில் மனிதன் பயணிக்கிறான்.
இதனால் கோபமுறும் கடவுள் இடையிடையே தனது சீற்றத்தை வெளிக்காட்டிக் கொள் கிறார் என்பது ஆத்மஞானிகளின் கருத்து.
இந்தக் கருத்து சரியா? பிழையா? என்ப வற்றுக்கு அப்பால் தர்மத்தின் வழியில் மனிதப் பயணம் அமையத் தவறுமாக இருந்தால், அதன் விளைவு துன்பமும் வேதனையுமாகவே இருக்கும் என்பது நான்கு யுகங்களும் நமக் குப் போதிக்கும் பாடம்தான். இந்த விடயம் ஓர் அடிப்படைக் கருத்து.
இந்த அடிப்படைக் கருத்திலிருந்து சில அனுமானங்களுக்கு நாம் வந்தாக வேண்டும்.
நாம் ஒன்றை நினைக்க இன்னொன்று நடந்து விடுகிறது. இவ்வாறான சம்பவம் அரசி யலில் நடக்கும்போது அதற்கு வெவ்வேறு விளக்கங்கள், வியாக்கியானங்களை அரசியல் ஆய்வு என்ற பெயரால் கொடுத்து விடுகின்றோம்.
இவ்வாறு அரசியல் சம்பவங்கள் அனைத் தும் இராஜதந்திர ரீதியில் நடக்கின்றன என நாம் விளக்கப்படுத்தினாலும் இன்னமும் இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற கால சந்தர்ப்பம் இருந்தபோதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவேன் என மகிந்த ராஜபக் தீர்மானம் எடுப்பதற்குப் பின்னணியாக இருந்த அரசியல் இராஜதந்திரம் எது என்பது கேள்விக்குரியது.
இவ்வாறானதொரு கேள்வி எழுகின்றபோது எல்லாம் இறை செயல் என்ற பதிலைத் தவிர வேறு எதனையும் கூறமுடியாமல் போகும்.
இவை ஒருபுறம் இருக்க, இன்றைய தமிழர் அரசியலில் நடக்கின்ற செயற்பாடுகளைப் பார்க்கும்போது அரசியல் இராஜதந்திரம் என்ற பெயரால் இறை செயல் இயங்கத் தொடங்கி விட்டதோ என்று நினைப்பதில் தவறிருக்க முடியாது.
அதாவது உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி யைப் பிடிப்பதுதான் தமக்கு வெற்றி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நினைக்கிறது.
இந்த நினைப்பினூடாகத்தான் அடுத்த தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளப் போகிறது என்று கருத்துரைப்பவர்களும் இருப்பர்.
இங்கு அரசியல் ஆய்வாளர்களில் ஒரு பகுதி யினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந் திரத்தை மிகக் கெட்டித்தனமாகப் பிரயோகித் துள்ளது.
அதிலும் யாழ்ப்பாண மாநகர சபையில் கூட்ட மைப்பு பிரயோகித்த இராஜதந்திரம் நினைத்துப் பார்க்க முடியாதது என்று கூறுவர்.
ஆனால் கூட்டமைப்பின் இந்த இராஜதந் திரம் எதிர்காலத்தில் தோல்வியாக மாறும்போது,
ஐயா! அன்று நாம் எடுத்த முடிவு தவறானது என்று சிந்திக்க வைக்கும்; அவ்வாறான ஒரு நிலைமையே எல்லாம் இறை செயல் என்ப தாக நிலைமையை மாற்றும்.